காலையிலேயே ஷாக்..! திமுக MLA மீது பாய்ந்தது வழக்கு.. போலீசார் அதிரடி கைது..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காலையிலேயே ஷாக்..! திமுக MLA மீது பாய்ந்தது வழக்கு.. போலீசார் அதிரடி கைது..!!

Published

on

தமிழக முதலமைச்சரை ஒருமையில் அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். அவர் மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், உள்ளூர் பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்குத் தேவையான மருத்துவ மாத்திரைகளை வழங்க அவருடைய ஆதரவாளர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். ஆனால், அவர்களைப் போலீசார் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்த அங்கிருந்த திமுகவினர், காவல் நிலையம் முன்பு திரண்டு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in