CINEMA
இதுக்கு ‘NO’ சொல்லியிருந்தா நடிகையா இருக்க அர்த்தமே இல்லை…. மேடையில் கண்கலங்கி பேசிய வாணி போஜன்….!!
சின்னத்திரையில் நடிக்க தொடங்கியதன் மூலம் திரையுலகில் அறிமுகமான வாணி போஜன் தற்போது வெள்ளித்திரையிலும் ஜொலிக்க தொடங்கியுள்ளார். சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் சமீபத்தில் அஞ்சாமை என்ற படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனரான சுப்புராமன் இயக்கத்தில் உருவான படம் தான் அஞ்சாமை. இந்த படத்தின் முழு உரிமையையும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய நடிகர் நடிகைகள் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகை வாணி போஜன் இந்தப் படத்தில் நான் இரண்டு குழந்தைங்களுக்கு அம்மாவாக நடித்திருப்பதால் எப்படி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க ஒப்பு கொண்டீர்கள் என பலரும் கேட்பார்கள்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நான் நடிகையாக இருப்பதற்கு அர்த்தமே இல்லை என்று கூறியுள்ளார். அதோடு அஞ்சாமை படத்தில் நடித்தது தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக கண்ணீர் கலந்த மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.