அவர் instagramல் ஹீரோயின் தேடுகிறார்” சூரி-யை கலாய்த்த சிவகார்த்திகேயன்….!! - cinefeeds
Connect with us

CINEMA

அவர் instagramல் ஹீரோயின் தேடுகிறார்” சூரி-யை கலாய்த்த சிவகார்த்திகேயன்….!!

Published

on

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக பிரபலமானவர் சூரி. ஆரம்பகாலகட்டத்தில் எத்தனையோ படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் சூரி நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த பிறகு புரோட்டா சூரியாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு அவர் ரசிகர்களால் கவனிக்கப்பெற்றார். தொடர்ந்து பல படங்களில் தனது காமெடியால் தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார். இப்போது சூரி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார். விடுதலை பாகம் ஒன்று படத்தில் கதாநாயகனாக மாறிய சூரி அடுத்ததாக கருடன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Advertisement

திரில்லர் படமான வெற்றிமாறனின் கருடன் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தான் பெற்றுள்ளது. இந்த படத்தில் சசிகுமார் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்தப் படமும் சூரிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக தான் அமையும் என்பது ஆரம்பத்தில் கிடைக்கும் வரவேற்பே உணர்த்துகிறது. ஆக இனி சூரி வளர்ந்து வரும் கதாநாயகனாகத்தான் அறியப்படுவார்.

இதனிடையே கருடன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பங்கேற்று இருந்தார். அவர் சூரியை பற்றி பேசியபோது இனி சூரி கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பார். Instagramல் கதாநாயகிகளை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி சூரியை கலாய்த்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement