மோகன்லால்-க்கு நன்றியே கிடையாது…. நகைய அடகு வச்சு பணம் கொடுத்தேன்…. ஆதங்கத்தை கொட்டிய நடிகை….!! - cinefeeds
Connect with us

CINEMA

மோகன்லால்-க்கு நன்றியே கிடையாது…. நகைய அடகு வச்சு பணம் கொடுத்தேன்…. ஆதங்கத்தை கொட்டிய நடிகை….!!

Published

on

மலையாள திரை உலகில் பிரபல நடிகராக அறியப்படுபவர் மோகன்லால். இவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தமிழில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் கொண்டாடும் படமாக தான் இருந்தது.

ஏராளமானோருக்கு மிகவும் பிடித்த ஒரு நபராக தான் மோகன்லால் இருக்கிறார். ஆனால் மோகன்லால் நன்றி இல்லாத மனிதர் என்று ஒருவர் கூறியிருக்கிறார். நடிகை சாந்தி வில்லியம்ஸ் தான் இந்த கருத்தை கூறியது.

Advertisement

தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சாந்தி வில்லியம்ஸ் மோகன்லால் குறித்து பகிர்ந்து இருந்தார். அப்போது அவர் மோகன்லால் நடித்த ஹலோ மெட்ராஸ் கேர்ள் திரைப்படத்தில் சாந்தி வில்லியம்ஸ் அவர்களது கணவர் வில்லியம்ஸ் தான் கேமராமேனாக பணிபுரிந்துள்ளார்.

அப்போது இருந்தே மோகன்லால் வில்லியம்ஸ் குடும்பத்தினருடன் நெருங்கிய நண்பராக தான் பழகி வந்துள்ளார். வில்லியம்ஸ் அவர்களும் எப்போதும் லால் லால் என்று அவரைப் பற்றிய பேசிக் கொண்டிருப்பாராம்.

Advertisement

சாந்தி வில்லியம்ஸ் அவர்களது வீட்டின் அருகே ஷூட்டிங் நடந்தால் மோகன்லால் டிபன் கேரியரோடு வந்து தனக்கு வேண்டிய சாப்பாடை கேட்டு எடுத்து செல்வாராம். அந்த அளவிற்கு அவர்கள் குடும்பத்துடன் மோகன்லால் பழகி வந்துள்ளார்.

ஒருமுறை மோகன்லாலுக்கு பணத்தேவை இருந்த சமயத்தில் சாந்தி வில்லியம்ஸ் தனது நகைகளை அடகு வைத்து அவருக்கு பண உதவி செய்தாராம். இவ்வளவு செய்தும் தனது கணவர் வில்லியம்ஸ் இறந்தபோது மோகன்லால் வரவில்லை. அவர் நன்றி இல்லாதவர் என என்று சாந்தி வில்லியம்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement