CINEMA
ரசிகைகளை வருந்த செய்த அர்ஜுன் தாஸ்…. காதலியுடன் வெளியிட்ட புகைப்படம்….!!
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அர்ஜுன் தாஸ். 2012 ஆம் ஆண்டு வெளியான பெருமான் திரைப்படத்தின் மூலமாக இவர் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கைதி, அந்தகாரம், மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் இருந்தாலும் இவரது குரலுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. கைதி திரைப்படத்தில் லைஃப் டைம் செட்டில்மெண்ட் என இவர் கூறிய டயலாக் மிகவும் பிரபலமானது. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அர்ஜுன் தாஸ் தற்போது கதாநாயகனாகவும் நடிக்க துவங்கியுள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான புட்டபொம்மா, அநீதி, போர், ரசாவதி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது. இதனிடையே அர்ஜுன் தாஸ் நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை காதலிப்பதாக செய்திகள் பரவின. ஆனால் அது ஒரு படத்திற்கான ப்ரோமோஷன் என்பது பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில் அர்ஜுன் தாஸ் மலைப் பிரதேசம் ஒன்றில் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளார். காதலியின் முகத்தை காட்டாமல் பின்புறம் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஹார்டின் போட்டு பகிர்ந்துள்ளார்.
இதனைப் பார்த்து அர்ஜுன் தாஸ் ரசிகைகளுக்கு வருத்தமாக இருந்தாலும் காதலியின் முகத்தை காட்ட மாட்டீர்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அர்ஜுன் தாஸ் விரைவில் கமர்சியல் ஹீரோவாக மாறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.