CINEMA
அஜித்தின் “குட் பேட் அக்லி” படத்தில்…. இணையும் 2 முக்கிய பிரபலங்கள்…? எகிறும் எதிர்பார்ப்பு…!!
நடிகர் அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் நடிகர் பிரசன்னா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார்.
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் நடிகை த்ரிஷா, சுனில், நஸ்லேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹைதராபாத்தையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெறவுள்ளது.