மருத்துவமனையில் அட்மிட் ஆன ரஜினி…. TVK தலைவர் விஜய் போட்ட எக்ஸ் பதிவு…!! – cinefeeds
Connect with us

CINEMA

மருத்துவமனையில் அட்மிட் ஆன ரஜினி…. TVK தலைவர் விஜய் போட்ட எக்ஸ் பதிவு…!!

Published

on

உடல்நல குறைவு காரணமாக சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.  இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் Transcather முறையில் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in