காதல் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சினேகா…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!! - cinefeeds
Connect with us

CINEMA

காதல் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சினேகா…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!

Published

on

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் முன்னணி நடிகை சினேகா.இவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், புதுப்பேட்டை, உன்னை நினைத்து, பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.முன்னதாக 2001-ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.அதன் பிறகு சினேகா முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரையுலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பிரபல நடிகர்களான விஜய், தனுஷ், கமல் ஹாசன் ஆகியோருடன் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.கடந்த 2009-ஆம் ஆண்டு சினேகா முதல் முறையாக நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தார்.அதன் பிறகு கடந்த 2012-ஆம் ஆண்டு பிரசன்னாவும் சினேகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Sivaprakash (@siva_prakash_photography)

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in