“ஆஸ்கர் விருதே கொடுத்தாலும்” அதை மட்டும் செய்ய மாட்டேன்…. ஜான்வி கபூர் சொன்ன விஷயம்…!!! – cinefeeds
Connect with us

CINEMA

“ஆஸ்கர் விருதே கொடுத்தாலும்” அதை மட்டும் செய்ய மாட்டேன்…. ஜான்வி கபூர் சொன்ன விஷயம்…!!!

Published

on

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ரீதேவி. இவர் தற்போது நம்மோடு இல்லை என்றாலும் ரசிகர்கள் மனதில் அவருடைய படங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இவருடைய மூத்த மகள்  ஜான்வி கபூர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய அம்மாவுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை மட்டும் நான் எப்போதும் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.  அதாவது ஒரு படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுவேன். ஆனால் மொட்டை அடிப்பது மட்டும் செய்ய மாட்டேன்.

அந்த கதாபாத்திரத்திற்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்றாலும் செய்ய மாட்டேன். என்னுடைய நீளமான தலைமுடிக்காக என்னுடைய அம்மா அத்தனை அக்கறை எடுத்துக் கொண்டார். 4 நாட்களுக்கு ஒரு முறை என் தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்துவிடுவார். என்னுடைய தலை முடி பற்றி மிகுந்த பெருமை இருந்தது. முதல் படத்திற்காக தலைமுடியை வெட்டிய போது அம்மா கோபப்பட்டார் .எந்த சூழலிலும்  தலை முடியை வெட்டக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in