CINEMA
“தங்கலான்” படத்திற்காக கடுமையாக உழைத்த விக்ரம்…. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…??
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என்று பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான் இன்று வெளியாகி உள்ளது. படம் பார்த்த தயாரிப்பாளர் அருமையாக வந்திருப்பதாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் . இந்த படம் 100 முதல் 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் இந்த படம் தயாராகியுள்ளது. ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இதன் கதை உருவாகியுள்ளது..
உலகமெங்கும் சுமார் 2000 அதிகமான திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. தங்கலான் படத்திற்காக கடின உழைப்பை போட்டு நடிகர் விக்ரம் இந்த படத்திற்காக 30 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தங்கலான் படம் வெற்றி அடைந்தால் விக்ரம் தன்னுடைய சம்பளத்தை மேலும் உயர்த்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.