CINEMA
தங்கலான் படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல்…? தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு…!!

நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ திரைப்படம் OTT-யில் வெளியாகாததால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்த படம் செப்.20 நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. புத்த மதத்தை புனிதமாகவும், வைணவ மதத்தை நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் விதமான காட்சிகள் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் என்று தங்கலான் படத்தை OTT தளத்தில் வெளியிட தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொற்கொடி என்பவர் மனு அளித்துள்ளார். இதனால் தங்கலான் படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.