தியேட்டர்களில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் ஜான்வி கபூரின் ‘அந்த’ காட்சிகள்…முகத்தை காட்டாம இடுப்புக்கும் மார்புக்கும் மட்டும் ஃபோகஸா?…அந்த சீன்ல என் தப்புதான்.. மன்னிச்சிடுங்க!” – ஜான்வி கபூர் கிளாமர் பஞ்சாயத்தால் ‘பெடி’ இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு…! – cinefeeds
Connect with us

CINEMA

தியேட்டர்களில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் ஜான்வி கபூரின் ‘அந்த’ காட்சிகள்…முகத்தை காட்டாம இடுப்புக்கும் மார்புக்கும் மட்டும் ஃபோகஸா?…அந்த சீன்ல என் தப்புதான்.. மன்னிச்சிடுங்க!” – ஜான்வி கபூர் கிளாமர் பஞ்சாயத்தால் ‘பெடி’ இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு…!

Published

on

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் ஜூன் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டி வந்தாலும், படத்தில் ஜான்வி கபூரின் அறிமுகக் காட்சி பெரும் சர்ச்சையையும் சோஷியல் மீடியா பஞ்சாயத்தையும் கிளப்பியுள்ளது. ஆறு ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு இயக்குநர் புச்சி பாபு சனா உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தில், ராம் சரணின் கடின உழைப்பைப் பற்றிப் பேசாமல், ஜான்வி கபூரை தெலுங்குத் திரையுலகம் வெறும் ‘கவர்ச்சி பொம்மையாக’ மட்டுமே பயன்படுத்துவதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் கேமரா ஜான்வியின் முகத்தைக் காட்டாமல், அவரது இடுப்பு மற்றும் மார்புப் பகுதிகளை மட்டுமே ஃபோகஸ் செய்திருப்பதாகக் கடுமையான கண்டனங்கள் ஆன்லைனில் குவிந்தன.

இந்த விஸ்வரூப சர்ச்சைக்கு முதன்முறையாக முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குநர் புச்சி பாபு சனா எக்ஸ் (X) தளத்தில் விளக்கம் அளித்து மௌனம் கலைத்துள்ளார். ராம் சரண் – ஜான்வி கபூர் இடையேயான காதல் காட்சிகளை மிகவும் ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் காட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே அந்த அறிமுகக் காட்சியை அமைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் இந்த அளவிற்குப் பெரிய சர்ச்சையாக மாறும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், இது தனக்கு ஒரு நல்ல படிப்பினை என்றும், இனிவரும் காலங்களில் கதாநாயகிகளின் காட்சிகளை வடிவமைப்பதில் கூடுதல் கவனத்துடன் செயல்படப் போவதாகவும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.

Advertisement

திரைப்படம் என்பது பார்வையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, யாரையும் சங்கடப்படுத்தக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகக் கூறிய இயக்குநர், பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்குத் துளியும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், பார்வையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த குறிப்பிட்ட கவர்ச்சிக் காட்சிகளைத் திரைப்படத்திலிருந்து நீக்க (Delete) படக்குழு முடிவு செய்துள்ளது. ‘தேவரா’ படத்தைத் தொடர்ந்து ‘பெத்தி’ படத்திலும் கிளாமர் சர்ச்சையில் ஜான்வி கபூர் சிக்கியுள்ள நிலையில், இப்படம் முதல் நாளில் 112 முதல் 135 கோடி வரை வசூலித்தாலும், சனிக்கிழமை வசூல் சற்றே குறைந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமையான இன்று படத்திற்கான வசூல் அதிகரித்தால் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் பந்தயத்தில் படம் வெல்லும் எனத் திரையுலகினர் கணிக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in