LATEST NEWS
“ஆசிரியர்களே இப்படி செய்யலாமா..?” வகுப்பறையை டான்ஸ் ஃப்ளோராக மாற்றிய ஆசிரியர்கள்.. வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!
தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் மாவட்டம் கிசான்நகரில், அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்காக ஆர்மூர் துணைப் பிரிவு அளவில் மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறைகளில் பயிற்சி வகுப்புகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், ஆசிரியர்கள் சிலர் பிரபல சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் நடித்தும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
బ్రేకింగ్
ప్రభుత్వ పాఠశాలల్లో టీచర్ల రీల్స్ రచ్చ
నిజామాబాద్ కిసాన్ నగర్ జిల్లా పరిషత్ శిక్షణకు వచ్చిన పీ.ఈ.టీ టీచర్ల రీల్స్
కిసాన్ నగర్లో మూడు రోజుల పాటు జరిగిన ఆర్మూర్ సబ్ డివిజన్ స్థాయి శిక్షణ కార్యక్రమాలు
శిక్షణ సమయంలో సినిమా పాటలకు రీల్స్.. సోషల్ మీడియాలో వైరల్… pic.twitter.com/f8Vl6mehgI— Telugu Feed (@Telugufeedsite) August 6, 2026
இந்த ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிவேகமாக வைரலாகி வரும் நிலையில், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே, அரசு செலவில் நடத்தப்படும் பயிற்சி முகாமின் நோக்கம் அறியாமல் வகுப்பறைக்குள் ரீல்ஸ் மோகத்தில் ஈடுபட்டது பொறுப்பற்ற செயல் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
