அமரன்’ கொடுத்த 300 கோடி அரியணை.. மீண்டும் இணையும் எஸ்கே – கமல் கூட்டணி…சந்தோஷ் நாராயணன் மியூசிக்.. கமல் தயாரிப்பு! ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான ‘சேயோன்’ படத்தின் மரண மாஸ் அப்டேட்…! – cinefeeds
Connect with us

CINEMA

அமரன்’ கொடுத்த 300 கோடி அரியணை.. மீண்டும் இணையும் எஸ்கே – கமல் கூட்டணி…சந்தோஷ் நாராயணன் மியூசிக்.. கமல் தயாரிப்பு! ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான ‘சேயோன்’ படத்தின் மரண மாஸ் அப்டேட்…!

Published

on

‘பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்கு பின் சிவகார்த்திகேயனின் சினிமா கரியர் முடிந்துவிட்டது என்று விமர்சித்தவர்களுக்கு, ‘மாவீரன், அயலான், அமரன்’ என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து பதிலடி தந்தார் எஸ்கே. குறிப்பாக, உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூலித்த ‘அமரன்’ திரைப்படம் அவரை கோலிவுட்டின் ‘டயர் 1’ (Tier 1) ஹீரோக்கள் பட்டியலில் அழுத்தமாக அமரவைத்தது. இந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டக் களத்தை மையமாகக் கொண்ட இப்படம், அதிகப்படியான ஹைப் (Hype) காரணமாக ரசிகர்களிடையே பத்தோடு பதினொன்றாக மாறி, சுமாரான வெற்றியை மட்டுமே பெற்றது. ரசிகர்களின் இந்த ஏமாற்றத்தை தனது அடுத்த படத்தின் மூலம் போக்க எஸ்கே தற்போது தீவிரமாக இருக்கிறார்.

வெங்கட் பிரபுவுடன் இணைவதற்கு முன்பாக, ‘தாய் கிழவி’ படத்தின் மூலம் மெகா ப்ளாக் பஸ்டர் வெற்றியைத் தட்ட Millions-களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ‘தாய் கிழவி’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே, சிவக்குமார் சொன்ன ‘சேயோன்’ கதையின் ஒன்லைனால் ஈர்க்கப்பட்டு எஸ்கே இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். இப்படத்தை ‘அமரன்’ வெற்றிக் கூட்டணியைத் தொடர்ந்து மீண்டும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ராதிகாவை வைத்து ‘தாய் கிழவி’ என்ற தரமான படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன், தற்போது எஸ்கேவுடன் இணைந்திருப்பது படத்தின் மீதான வியாபார மார்க்கெட்டையும், எதிர்பார்ப்பையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.

Advertisement

சமீபத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் பூஜையுடன் தொடங்கிய ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின், சிவகார்த்திகேயனுக்கான பிரம்மாண்ட ஓபனிங் பாடல் காட்சி (Opening Song Video) படமாக்கப்பட்டு, தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது (Wrap Up). இந்த ஓபனிங் பாடல் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்குகளைக் குவித்து வருகிறது. ‘சேயோன்’ படத்தை முடித்த கையோடு, இயக்குநர் சிவக்குமாரின் அடுத்த படத்திலும் எஸ்கே நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘பராசக்தி’ தந்த சுமாரான வரவேற்பை மறந்து, ‘சேயோன்’ படத்தின் மூலம் எஸ்கே பாக்ஸ் ஆபீஸில் மீண்டும் ஒரு மெகா ப்ளாக் பஸ்டர் சம்பவத்தைச் செய்வார் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த கோலிவுட்டும் காத்திருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in