CINEMA
“அப்பா என்னை விட்டுருங்க” பெற்ற மகள் என்றும் பாராமல்… கை, கால்களைக் கட்டி 13 வயது சிறுமியை… நள்ளிரவில் தந்தை செய்த காரியம்… கையும் களவுமாகப் பிடித்த தாய்..!!
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள தேசார் தாலுக்காவில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி அன்று நள்ளிரவில் நடந்த இந்த அநாகரிகச் செயலில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 13 வயது சிறுமியின் கை, கால்களைக் கட்டி, வாயில் துணியைத் திணித்து அந்த நபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக, குடும்பப் பிரச்சினை காரணமாகக் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தவிர்ப்பதற்காகச் சிறுமியின் தாய் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். நள்ளிரவு வாக்கில் அவர் தனது சகோதரியுடன் வீட்டிற்குத் திரும்பிய போது, தனது கணவர் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார். தாயையும் அவரது சகோதரியையும் பார்த்தவுடன் குற்றம் சாட்டப்பட்ட தந்தை அங்கிருந்து உடனடியாகத் தப்பி ஓடியுள்ளார். அதன் பின்னர் தாய், மகளின் வாயிலிருந்த துணியை அகற்றி அவளை மீட்டுள்ளார்.
தன்னைத் தந்தை கட்டிப்போட்டு, கூச்சலிடாமல் இருக்க வாயில் துணியை வைத்து வன்புணர்வு செய்ததாக அந்தச் சிறுமி தாயிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தனது உறவினர்களுடன் தேசார் காவல் நிலையத்திற்குச் சென்று கணவர் மீது புகார் அளித்துள்ளார். தாயின் புகாரின் பேரில் போக்ஸோ (POCSO) உள்ளிட்ட மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய கொடூரத் தந்தையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
