CINEMA
பாக்யராஜ் இறந்த அந்த நாள்.. பூஜை அறையில் நடந்த சம்பவம்.. கண்ணே கலங்கிப்போச்சு… நடிகர் பார்த்திபன் உருக்கம்..!!
இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரும் திரையுலகினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாக்யராஜிடம் 11-வது உதவி இயக்குனராகப் பணியாற்றிய நடிகர் பார்த்திபன், இறுதிச்சடங்கு உள்ளிட்ட அனைத்து காரியங்களையும் முன்னின்று கவனித்துக் கொண்டார். பாக்யராஜ் மறைந்த செய்தி அவரது பேரனுக்குத் தெரியவந்த போது, “தாத்தா சாமியிடம் சென்றுவிட்டார்” என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதை நிஜமென்று நம்பிய அந்த சிறுவன், தனது தாத்தாவைத் தேடி நேராக பூஜை அறைக்குச் சென்று பார்த்த உருக்கமான சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
பாக்யராஜுடனான தனது ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பார்த்திபன், தான் உதவி இயக்குனராகச் சேர்ந்தபோது 300 ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அதில் பெரும் பகுதி அவரது தந்தையின் புற்றுநோய் மருத்துவச் செலவிற்கே சென்றுவிடும் என்றாலும், தனது குடும்ப சூழ்நிலையை பாக்யராஜிடம் காட்டியதில்லை என்று கூறியுள்ளார். பார்த்திபன் சீக்கிரம் ஹீரோவாக வேண்டும் என்ற நோக்கில் ‘தாவணிக் கனவுகள்’ திரைப்படத்தில் பாக்யராஜ் அவருக்கு போஸ்ட்மேன் கதாபாத்திரத்தைக் கொடுத்தார். தனது தந்தை மரணமடையும் தருவாயில், பார்த்திபனை பாக்யராஜிடம் தான் ஒப்படைத்ததாக அவர் உருக்கமாக நினைவுகூர்ந்துள்ளார்.
பாக்யராஜுக்கும் அவரது பேரனுக்கும் இடையே இருந்த பாசப்பிணைப்பு குறித்தும், இருவரும் அடிக்கடி காரில் வெளியே செல்லும் வழக்கம் குறித்தும் பார்த்திபன் பேசியுள்ளார். மேலும், பாக்யராஜின் இறுதிவரை தான் கூடவே நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டதைச் சிலர் தவறாகப் பேசி, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கருத்துக்களைப் பதிவிடுவது தனக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகப் பார்த்திபன் தனது பேட்டியில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
