“ஒரே நாத்தம் அடிக்குது” எனக்கு அருவருப்பா இருக்கு… இனி அனுப்பும்போது மோப்பம் பிடிச்சி பாருங்க… பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்தெடுத்த நடிகை திரிஷா..!! – cinefeeds
Connect with us

CINEMA

“ஒரே நாத்தம் அடிக்குது” எனக்கு அருவருப்பா இருக்கு… இனி அனுப்பும்போது மோப்பம் பிடிச்சி பாருங்க… பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்தெடுத்த நடிகை திரிஷா..!!

Published

on

பிரபல ஆடை நிறுவனமான ‘ZARA’ ஆன்லைன் மூலம் டெலிவரி செய்த ஆடைகளில் கடுமையான உடல் துர்நாற்றம் வீசுவதாக முன்னணி நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். ஒரு சாதாரண வாடிக்கையாளராகத் தனது கோரிக்கையை வைப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆடைகளை பேக் செய்வதற்கு முன்பாகக் குறைந்தபட்சம் அவற்றின் தரத்தை மோப்பம் பிடித்தாவது சரிபார்த்து அனுப்ப வேண்டும் என்று சாடியுள்ளார்.

இந்தத் தவறு தமக்கு முதன்முறையாக நடக்கவில்லை என்றும், தொடர்ந்து மூன்றாவது முறையாக இதேபோன்று துர்நாற்றம் வீசும் ஆடைகளே டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் த்ரிஷா காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆடை விநியோகத்தில் உலகப் புகழ்பெற்ற ஒரு நிறுவனம், அடுத்தடுத்து இத்தகைய மோசமான சேவையை வழங்குவது தனக்கு மிகவும் அருவருப்பாக (Disgusting) உள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

சமூக ஊடகங்களில் த்ரிஷா பதிவிட்ட இந்த அதிருப்திப் பதிவு, தற்போது இணையவாசிகளிடையே மிகப்பெரிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. உலகளாவிய பிராண்டான ஜாராவின் தரக்கட்டுப்பாடு மற்றும் ஆன்லைன் டெலிவரி முறைகள் குறித்துப் பலரும் கேள்வி எழுப்பி த்ரிஷாவின் பதிவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in