அடுத்த வெடி..! “உதயநிதிக்காக கரூரில் மக்களைக் கொன்று குவிச்சாங்க” அந்த கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்… சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி யார் தெரியுமா..? திமுகவை அதிரவைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்த வெடி..! “உதயநிதிக்காக கரூரில் மக்களைக் கொன்று குவிச்சாங்க” அந்த கணக்கை முடிக்காமல் விடமாட்டோம்… சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி யார் தெரியுமா..? திமுகவை அதிரவைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!

Published

on

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்காகக் கரூரில் காவல்துறையைப் பயன்படுத்தித் தங்கள் மக்களைக் கொன்று குவித்ததாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், கரூர் என்பது தனக்கு மிகவும் முக்கியமான ஊர் என்றும், அங்கே அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கான நியாயத்தைப் பெறாமல் விடமாட்டோம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார்.

கரூரில் தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சூழ்ச்சிகளுக்கான கணக்கு விரைவில் முடிக்கப்படும் என்றும், அந்தச் சம்பவத்தில் சட்டம் நிச்சயம் தன் கடமையைச் செய்யும் என்றும் ஆதவ் அர்ஜுனா எச்சரித்தார். கரூரில் அரங்கேற்றப்பட்ட அந்த அரசியல் சூழ்ச்சிகளை முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்த்த சாட்சி என்றும், அவர் மூலமாக அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Advertisement

மேலும், கரூரில் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான சம்பவத்தை மக்கள் மத்தியில் இருந்து திசைதிருப்புவதற்காகவே, திட்டமிட்டு தவெக சட்டமன்ற உறுப்பினரிடம் திமுகவினர் குதிரை பேரம் பேசிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்றும் ஆதவ் அர்ஜுனா சாடினார். தவெக ஆட்சியை வீழ்த்த நினைப்பவர்களின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு, கரூரில் நடந்த அனைத்து உண்மைகளும் இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்தமாக வெளிவரும் என்றும் அவர் அதிரடியாகப் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in