மாஸ்டர் பிளான்…! அடுத்த 30 ஆண்டுகால வளர்ச்சிக்காக 8 மெகா திட்டங்களை அறிவித்த தவெக… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி முழக்கம்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாஸ்டர் பிளான்…! அடுத்த 30 ஆண்டுகால வளர்ச்சிக்காக 8 மெகா திட்டங்களை அறிவித்த தவெக… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி முழக்கம்….!!

Published

on

தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து மூன்று வாரங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், சென்னைக்கு அடுத்தபடியாக அதிவேகமாக வளர்ந்து வரும் கோவை மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த கால ஆட்சிகளில் புறக்கணிக்கப்பட்ட கோவைக்கு தற்போதைய தவெக அமைச்சரவையில் இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பொதுப்பணித்துறையை நஷ்டமில்லாமல் லாபம் தரும் துறையாக மாற்றப்போவதாகவும், இதற்காக அனைத்து ஒப்பந்ததாரர்களிடமும் கலந்தாலோசனை நடத்திப் பணிகளைத் தரமாகவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும் முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த முப்பது ஆண்டுகாலத் தேவைகளைக் கணக்கில் கொண்டு, குறுகிய இடத்தில் அதிகப் பயன் தரும் தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

இதன் ஒரு பகுதியாக, எல் அண்ட் டி புறவழிச்சாலை மற்றும் ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிப்பது உள்ளிட்ட எட்டு மெகா திட்டங்கள் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் நிலவும் சில நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண டெல்லி சென்று மத்திய அமைச்சர்களைச் சந்திக்கவுள்ளதாகவும், தற்போது மோசமான நிலையில் உள்ள அரசு மருத்துவமனைக் கட்டிடங்களை ஆய்வு செய்து புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், எந்தவொரு அரசு டெண்டருக்கும் கட்சி நிதிகள் பெறப்படாது என்றும், கோவையில் உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்ட விளையாட்டு மையம் ஒன்று அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதற்காக அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரு தனிக்குழு உருவாக்கப்பட்டு, நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு அடுத்த அறுபது நாட்களுக்குள் உரிய தீர்வு காண முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in