நான் ஒன்றும் பள்ளி மாணவன் அல்ல…லீவுக்கு மெடிக்கல் சர்டிபிகேட் கேட்ட பாஸ்… ஒரே கேள்வியால் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய Gen Z ஊழியர்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் ஒன்றும் பள்ளி மாணவன் அல்ல…லீவுக்கு மெடிக்கல் சர்டிபிகேட் கேட்ட பாஸ்… ஒரே கேள்வியால் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய Gen Z ஊழியர்…!

Published

on

சமூக ஊடகமான ‘X’ தளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்த வாட்ஸ்அப் உரையாடலின் ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த உரையாடலில், ‘ஜென்-இசட்’ தலைமுறையைச் சேர்ந்த இளம் ஊழியர் ஒருவர் தனக்குக் கடுமையான காய்ச்சல் இருப்பதால் அலுவலகத்திற்கு வர முடியாது என்று தனது மேலாளரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அந்த மேலாளர், நிறுவனத்தின் கொள்கைப்படி விடுப்பு எடுக்க வேண்டுமானால் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலாளரின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த அந்த ஊழியர், “நான் ஒன்றும் பள்ளி மாணவன் அல்ல” என்று காரசாரமாகப் பதிலளித்துள்ளார். மேலும், நிறுவன விதிப்படி தனக்கு இருக்கும் மருத்துவ விடுப்பைப் பயன்படுத்துவதாகவும், லேசான காய்ச்சலுக்கு மருத்துவச் சான்றிதழ் தேவைப்பட்டால் நிறுவனத்தின் இயக்குநரையே தனக்கு மருந்துச் சீட்டு எழுதித் தருமாறு கூறுங்கள் என்றும் சாடியுள்ளார். அத்துடன், பள்ளி நாட்களைப் போல பெற்றோரின் கையெழுத்திட்ட கடிதமோ அல்லது மருத்துவச் சான்றிதழோ தன்னிடம் இல்லை என்றும், தான் ஓய்வெடுக்கச் செல்வதால் இனி எந்தவொரு அழைப்புக்கோ அல்லது குறுஞ்செய்திக்கோ பதிலளிக்க மாட்டேன் என்றும் கறாராகக் கூறி உரையாடலை முடித்துள்ளார்.

Advertisement

இந்த வாட்ஸ்அப் அரட்டை சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. ஒரு தரப்பினர் ஊழியருக்கு ஆதரவாக, நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கும் போது அவர்களை நம்ப வேண்டும் என்றும், லேசான காய்ச்சலுக்குக் கூட மருத்துவச் சான்றிதழ் கேட்பது ஊழியர்களின் சுயமரியாதையைப் பாதிக்கும் என்றும் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினரோ, சிலர் விடுப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதால் நிறுவனங்கள் விதிகளைப் பின்பற்றுவதில் தவறில்லை என்றும், மேலாளரிடம் அந்த ஊழியர் இன்னும் சற்று மரியாதையுடன் பேசியிருக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in