LATEST NEWS
BIG BREAKING: செந்தில் பாலாஜியை தேடும் போலீஸ்..?தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..!!
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரை ரூ.35 கோடி கொடுத்து விலை பேச முயன்ற புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சட்டவிரோத குதிரை பேரம் தொடர்பாகச் சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரரை உடனடியாகக் கைது செய்யக் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதற்காகச் சென்னை மற்றும் கரூரில் உள்ள செந்தில்பாலாஜிக்குச் சொந்தமான வீடுகள், பண்ணை வீடுகள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
