“ஐயோ பாவம்.. கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் விழுந்த 11 வயது சிறுவன்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”.. !! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ பாவம்.. கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் விழுந்த 11 வயது சிறுவன்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”.. !!

Published

on

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள ராஜாபார் சௌக்கில் உள்ள ஒரு இனிப்புக் கடையில் ஏற்பட்ட கைகலப்பினால், 11 வயது சிறுவன் சுபம் குமார் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. மருந்து வாங்கிவிட்டுத் தாய்மாமனுடன் காலை உணவு சாப்பிடக் கடைக்குச் சென்ற இடத்தில், அங்கிருந்தவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுப் சண்டை மூண்டது. அப்போது சண்டையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய கரண்டியிலிருந்து கொதிக்கும் எண்ணெய் தெறித்ததால், பீதியடைந்த சிறுவன் நிலைதடுமாறி நேரடியாகக் கொதிக்கும் எண்ணெய் நிரம்பிய வாணலியிலேயே விழுந்துள்ளான்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஹோட்டல் உரிமையாளரோ அல்லது மற்றவர்களோ சிறுவனைக் காப்பாற்ற முன்வரவில்லை என்றும், அவனது தாய்மாமனே தீக்காயங்களுக்கு நடுவே அவனை வெளியே இழுத்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். பலத்த தீக்காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவனது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in