பகீர்..! “ஒரே நாளில் 3 கொடூரக் கொலைகள்..!” திருவொற்றியூரில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொலை.. மெரினாவில் நேபாள வாலிபர் சடலம்… கும்மிடிப்பூண்டியில் நண்பனே கொலையாளி… சென்னையை உலுக்கிய அதிர்ச்சிச் சம்பவங்கள்..!! – cinefeeds
Connect with us

CRIME

பகீர்..! “ஒரே நாளில் 3 கொடூரக் கொலைகள்..!” திருவொற்றியூரில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொலை.. மெரினாவில் நேபாள வாலிபர் சடலம்… கும்மிடிப்பூண்டியில் நண்பனே கொலையாளி… சென்னையை உலுக்கிய அதிர்ச்சிச் சம்பவங்கள்..!!

Published

on

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் யார் சீனியர் என்ற தகராறில் பிளஸ்-2 மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த தனுஷ் என்ற மாணவரை, பிளஸ்-1 மாணவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் சிலர் காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தப்பியோடிய 10 பேரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே சென்னை மெரினா கடற்கரை அண்ணா நீச்சல் குளம் அருகே, நேபாளத்தைச் சேர்ந்த ஸ்ரீராம்சாகா என்ற இளைஞர் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த விபரீதம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து சொந்த ஊருக்குத் தப்பியோட முயன்ற பீகாரைச் சேர்ந்த சன்னிசதா (26) என்பவரைச் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். தொழில்முறை அல்லது தனிப்பட்ட பழக்கத்தில் ஏற்பட்ட பணத் தகராறே இந்த கொடூரக் கொலைக்குக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement

மற்றொரு சம்பவமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சாணாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் என்ற வாலிபர், தனியார் வயல்வெளியில் உள்ள சமாதி மீது வெட்டப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உடலாகக் கிடந்தார். இவர் மீது ஏற்கனவே இரும்புத் தொழிற்சாலையில் கொள்ளையடித்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை வழக்கில் அவரது நெருங்கிய நண்பரான காமேஷ் என்பவரைப் பாதிரிவேடு காவல்துறையினர் கைது செய்தனர். மது அருந்தும்போது ஏற்பட்ட முன்விரோதத் தகராறில் காமேஷ், ரஞ்சனைச் சரமாரியாக வெட்டிக் கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த குற்றச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in