LATEST NEWS
“என் சீட்டைத் தர முடியாது..!” வேலையை இழந்து நின்ற பெண்ணுக்கு கிடைத்த கோடிக்கணக்கான மகுடம்… விமானத்தில் தொடங்கிய சண்டையின் ஷாக்கிங் கிளைமாக்ஸ்.. இணையத்தை அதிரவைக்கும் வைரல் வெற்றிச் சம்பவம்..!!
ஒரு பிரேசிலியப் பெண் விமானத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தைக்குத் தனது இருக்கையைத் தர மறுத்ததால், அவரது அனுமதி இன்றி வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்பட்டார். இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகி, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதால் அவர் தனது வேலையையும் இழக்க நேரிட்டது. இருப்பினும், அவர் முடங்கிவிடாமல் தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராகத் தைரியமாக உண்மையை உரக்கப் பேசினார். தனது அனுமதியின்றி வீடியோவை எடுத்து பதிவிட்டவர்களின் தவறான செயலை அவர் உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டினார்.
転落からの逆転
泣く子供に席を譲らなかったブラジル人女性。撮影され、ネットに晒され大炎上、職を失う
物語はそこで終わらなかった。彼女は沈黙せず、真実を語った
非は、勝手に撮影した側と判明
インスタフォロワーは数百万人へ。そして、航空会社と撮影者を巨額提訴pic.twitter.com/a85fJfmhnA— 櫻子🍡🇯🇵 (@dmmsell) August 14, 2026
அவரது இந்தத் துணிச்சலானப் போராட்டம் இணையவாசிகளின் ஆதரவைப் பெற்றுத் தந்ததுடன், அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் உயர்த்தியது. மேலும், தன் அனுமதியின்றி வீடியோ எடுத்த நபர் மீதும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்காத விமான நிறுவனத்தின் மீதும் அவர் மிகப்பெரிய தொகையைக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்து, தனக்கு நேர்ந்த அவமானத்தையே வெற்றிக்கானப் பாதையாக மாற்றிய அவரது கதை பலருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக மாறியுள்ளது.
