CRIME
நள்ளிரவு நேரம்..! “எங்களை விட்டுருங்க..” அலறிய காதல் ஜோடி… நடுரோட்டில் காரைத் துரத்திப் பிடித்து இளம்பெண்ணை சீரழித்த 8 பேர்… காதலனை கண்முன்னே வெறிச்செயல்..!!
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில், காரில் சென்றுகொண்டிருந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது ஆண் நண்பரைத் தாக்கிய 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சக ஊழியர்களான 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணும் அவரது ஆண் நண்பரும், செவ்வாய்க்கிழமை இரவு காரில் கேந்திரபாடா நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
நள்ளிரவில் கட்டாக்-சந்த்பலி சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட ஒரு கும்பல் திடீரென காரை வழிமறித்து நிறுத்தக் கட்டாயப்படுத்தியுள்ளது. பின்னர், அந்த ஆண் நண்பரை அக்கும்பல் கொடூரமாகத் தாக்கியதோடு, காரில் இருந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது. புதன்கிழமை அதிகாலையில் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையை அணுகிப் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கட்டாக் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் வினித் அகர்வால், குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்துள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
