“அப்போ இவர் என் அப்பா இல்லையா.? குழந்தை பெற்றுக்கொள்ள வந்த பெண்ணுக்கு துரோகம்… 40 வருட ரகசியம் உடைந்தது… 91 வயது மகப்பேறு மருத்துவர் மீது பாய்ந்த பரபரப்பு வழக்கு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அப்போ இவர் என் அப்பா இல்லையா.? குழந்தை பெற்றுக்கொள்ள வந்த பெண்ணுக்கு துரோகம்… 40 வருட ரகசியம் உடைந்தது… 91 வயது மகப்பேறு மருத்துவர் மீது பாய்ந்த பரபரப்பு வழக்கு..!!

Published

on

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில், 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தற்போது DNA பரிசோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேரி எலன் லுகேசிச் என்ற பெண்ணும், அவரது மகன் ஜோசப் லாட்கே ஹைடரும் தங்களது அனுமதியின்றி சொந்த விந்தணுவைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு செய்ததாக, முன்னாள் மகப்பேறு மருத்துவர் ஃபிரடெரிக் டெட்மேன் மீது மில்வாக்கி கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த 1980-ஆம் ஆண்டு குழந்தை பாக்கியம் இல்லாததால் மேரி எலன் மற்றும் அவரது கணவர் இந்த மருத்துவரை நாடியுள்ளனர். அப்போது ஒரு மருத்துவ மாணவரின் விந்தணுவைக்கொண்டு செயற்கை கருத்தரிப்பு செய்வதாகக் கூறி, 1983-ல் ஜோசப் பிறந்துள்ளார். ஆனால், 2024-ல் ஜோசப் மேற்கொண்ட DNA பரிசோதனையில், தங்களுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர் ஃபிரடெரிக் டெட்மேன் தான் தனது உயிரியல் தந்தை என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

Advertisement

தனது முழு அடையாளமுமே ஒரு மருத்துவரின் பொய்யால் கட்டமைக்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக ஜோசப் தெரிவித்துள்ளார். தற்போது 91 வயதாகும் மருத்துவர் டெட்மேன் இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்ததோடு, இது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். இருப்பினும், இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மேலும் பல பெண்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in