“வயித்துக்குள்ள அது எப்படிப் போச்சு…?” பெண் வயிற்றில் மருத்துவர்கள் மறந்த ‘அந்த’ பொருள்.. அறுவை சிகிச்சையில் நேர்ந்த கொடூர அலட்சியம்.. தனியார் மருத்துவமனையில் நடந்த அவலம்..!!! – cinefeeds
Connect with us

CRIME

“வயித்துக்குள்ள அது எப்படிப் போச்சு…?” பெண் வயிற்றில் மருத்துவர்கள் மறந்த ‘அந்த’ பொருள்.. அறுவை சிகிச்சையில் நேர்ந்த கொடூர அலட்சியம்.. தனியார் மருத்துவமனையில் நடந்த அவலம்..!!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், அறுவை சிகிச்சையின் போது பெண் ஒருவரின் வயிற்றில் துணி ஒன்றை மருத்துவர் வைத்துத் தைத்த கொடூரமான அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கான்பூர் தேஹாத் பகுதியைச் சேர்ந்த 24 வயதான சோனி என்ற பெண்ணுக்கு வயிற்றில் ஏற்பட்ட இரத்தக் கட்டிக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1.5 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. மக்சுதாபாத்தில் உள்ள ஓம் சாந்தி மருத்துவமனையின் உரிமையாளர் அஜய் என்பவர், கல்யாண்பூரில் உள்ள விஸ்வாஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையை வாடகைக்கு எடுத்து, டாக்டர் ரச்சிதா நிகம் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் இந்த அறுவை சிகிச்சையைச் செய்துள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்ததில் இருந்தே சோனிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதோடு, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து சீழ் வடியத் தொடங்கியுள்ளது. நான்கு மாதங்களாகப் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையாததால், சோனியின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அக்பர்பூரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு இரண்டாவது முறையாக அறுவை சிகிச்சை செய்தபோது, அவரது வயிற்றுக்குள் துணி ஒன்று சிக்கியிருந்ததைக் கண்டுபிடித்து அதனை வெளியே எடுத்தனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த அதிர்ச்சியூட்டும் அலட்சியத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மற்றும் ஓம் சாந்தி மருத்துவமனை உரிமையாளரின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, விஸ்வாஸ் மருத்துவமனையின் உரிமையாளர் ஜகதீஷ் சந்திரா, தங்களது அறுவை சிகிச்சை அறையை வெறும் 4,000 ரூபாய்க்கு மட்டுமே வாடகைக்கு விட்டதாகவும், நோயாளிக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, கல்யாண்பூர் உதவி ஆணையர் திலீப் சிங் மற்றும் சுகாதார அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in