CRIME
“உன்னைத் திருமணம் செய்கிறேன்..!” நம்ப வைத்து கழுத்தறுத்த இன்ஸ்டாகிராம் காதலன்.. கணவனை இழந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. ராய்ப்பூரில் நெஞ்சைப் பிளக்கும் இரட்டைக் கொலை..!!
ராய்ப்பூரில் கணவனை இழந்த சுனிதா என்ற பெண்மணி, தன் 8 வயது மகன் காவ்யான்ஷை மட்டுமே தனது உலகமாகக் கருதி பல வருடம் போராடிப் பள்ளி ஆசிரியையாக வாழ்வை மீட்டுவந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சத்ரபால் சிங் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி, தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக அவன் அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி சுனிதா தன் வாழ்வைத் தொலைத்துள்ளார். சத்ரபால் ஏற்கனவே ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதை அறிந்த சுனிதா அவனுடன் வாக்குவாதம் செய்தபோது, தன் கிராமத்திற்கு வரவழைத்துத் தாயும் சேயுமாக இருவரையும் சத்ரபால் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளான்.
கொலைக்குப் பிறகு ஆதாரங்களை அழிக்கச் சுனிதா மற்றும் அவனது மகனின் உடல்களைச் சேலைகளில் சுற்றி, சாக்குகளில் திணித்து, கல்லால் கட்டி இரண்டு வெவ்வேறு கிணறுகளில் வீசியெறிந்த அவனது வெறிச்செயல் அனைவரையும் உலுக்கியுள்ளது. தன் தாலியையும், நகைகளையும், ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு சென்ற சுனிதாவுடன் சேர்த்து, குடும்பத்தின் கடைசி வாரிசான பிஞ்சு சிறுவன் காவ்யான்ஷும் கொடூரமாகக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம், நம்பகத்தன்மையையும் உறவுகளின் புனிதத்தையும் முற்றிலும் தகர்த்தெறிந்து ஒட்டுமொத்தச் சமூகத்தையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
