CRIME
“என்னை காப்பாத்து அண்ணா” அண்ணன் கண்முன்னே கதறிய தங்கை… சிறுமியை கடத்தி தெரிந்தவரே செய்த கொடூர துரோகம்… மத்தியப் பிரதேசத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!
மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர், குடும்பத்திற்கு அறிமுகமான நபரால் கடத்திச் செல்லப்பட்டுக் குற்றத்திற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுமி தனது சகோதரனுடன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அவர்களை அழைத்துச் செல்வதாகக் கூறி கடத்திச் சென்றுள்ளார்.
பின் அந்த சிறுவனின் கண் முன்னே அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தின் போது தடுத்து நிறுத்த முயன்ற சிறுமியின் சகோதரர் தாக்கப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தகவல் குறித்துப் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை விரைந்து செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்தது. குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
