“என் உயிருக்கு ராபிடோ தான் பொறுப்பு..!” 20 லட்சம் செலவு… ஆனா கொடுத்ததோ வெறும் 1 லட்சம்தான்.. விபத்தில் சிக்கிய பெண்ணின் கதறல்.. இணையத்தை உலுக்கும் சம்வபம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் உயிருக்கு ராபிடோ தான் பொறுப்பு..!” 20 லட்சம் செலவு… ஆனா கொடுத்ததோ வெறும் 1 லட்சம்தான்.. விபத்தில் சிக்கிய பெண்ணின் கதறல்.. இணையத்தை உலுக்கும் சம்வபம்..!!

Published

on

பெங்களூருவைச் சேர்ந்த உள்துறை வடிவமைப்பாளர் சனிகிருஷ்ணா கடந்த ஜூன் 17 அன்று புக் செய்த ராபிடோ பைக் சவாரி ஒன்றின்போது, ஓட்டுநர் டிராக்டரை முந்திச் செல்ல முயன்றதில் பைக் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சனிகிருஷ்ணாவைத் பின்னால் வந்த டிராக்டர் ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார். இந்த கோர விபத்தில் அவருக்கு 7 விலா எலும்புகள் முறிந்ததோடு, மண்ணீரலை அகற்றும் அவசர அறுவை சிகிச்சை மற்றும் முக சீரமைப்பு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மருத்துவச் செலவு 20 லட்ச ரூபாயைத் தாண்டியுள்ளதால் தனது எதிர்கால மற்றும் கடந்த மருத்துவச் செலவுகள் முழுவதையும் ராபிடோ நிறுவனமே ஏற்க வேண்டும் என்று கோரி அவர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறும் ராபிடோ நிறுவனம் வெறும் 1 லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகையை மட்டுமே நிவாரணமாக வழங்க முன்வந்துள்ள நிலையில், 20 லட்சம் ரூபாய் என்பது இமாலயத் தொகை என்பதால் இவர்கள் பெரும் கடனில் சிக்க நேரிடும் என்பதால் அந்நிறுவனம் எந்தவிதமான பிக்தலாட்டங்களும் இன்றி அனைத்து மருத்துவச் செலவுகளையும் முழுமையாக ஏற்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in