LATEST NEWS
த.வெ.க-வில் வெடிக்கும் அடுத்த பவர் பாலிடிக்ஸ்… முக்கிய பொறுப்பைக் கைப்பற்ற துடிக்கும் ஜெகதீஷ் பழனிசாமி… விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன ..? பரபரப்பில் கோட்டை..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய்யின் தனிச்செயலாளராக இருந்து வரும் ஜெகதீஷ் பழனிசாமி, கட்சியின் இளைஞரணிப் பொறுப்பைக் கைப்பற்றத் தீவிர முயற்சி செய்து வருவதாகத் தற்பொழுது புதிய தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், இந்த புதிய அரசியல் நகர்வு கட்சி வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஜெகதீஷ் பழனிசாமி ஏற்கனவே கட்சியின் இணைப் பொருளாளராக முக்கியப் பொறுப்பு வகித்து வருகிறார். இருப்பினும், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் இளைஞரணித் தலைமைப் பொறுப்பைப் பெறுவதன் மூலம், தனக்கென ஒரு பலமான தனித்த அரசியல் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள அவர் விரும்புவதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவராக இருப்பதால், இந்த முக்கியப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
இந்தத் திடீர் இளைஞரணிப் பொறுப்பு விவகாரம் தொடர்பாக, த.வெ.க-வின் உயர் மட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் மத்தியில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. கட்சியின் சீனியர்கள் மற்றும் இளைஞரணிக்குத் தகுதியான பிற இளம் தலைவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னரே, முதலமைச்சர் விஜய் இதற்கான இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
