“மருமகள் பெயருக்கு எழுதுங்க..” மனைவி பெயருக்கு நிலத்தை மாற்றிய அடுத்த நாளே நடந்த விபரீதம்.. தரகர் கொடுத்த ஐடியாவால் நடுரோட்டில் நின்ற கணவன்.. பீகாரில் அரங்கேறிய பகீர் மோசடி..!! – cinefeeds
Connect with us

CRIME

“மருமகள் பெயருக்கு எழுதுங்க..” மனைவி பெயருக்கு நிலத்தை மாற்றிய அடுத்த நாளே நடந்த விபரீதம்.. தரகர் கொடுத்த ஐடியாவால் நடுரோட்டில் நின்ற கணவன்.. பீகாரில் அரங்கேறிய பகீர் மோசடி..!!

Published

on

பீகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்திலுள்ள கர்ஹாரா கிராமத்தைச் சேர்ந்த விஷால் குமார் என்பவரது தாயார், தனது பெயரிலிருந்த 9 கத்த நிலத்தை தனது ஒரே மகனுக்கு மாற்ற விரும்பிய நிலையில், உடல்நிலை சரியில்லாததால் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றபோது அங்கு நின்ற தரகர் ஒருவர் நிலத்தை மகனுக்கு மாற்றினால் அதிக செலவாகும் என்றும், மருமகள் அல்லது மகளின் பெயருக்கு மாற்றினால் குறைந்த செலவில் முடிக்கலாம் என்றும் தவறான யோசனை கூறியுள்ளார்; மகனைத் தவிர வேறு வாரிசுகள் இல்லாததால் அவர்கள் அந்த நிலத்தை மருமகளின் பெயரிலேயே மாற்றி எழுதியுள்ளனர்.

ஆனால், நிலம் தன் பெயருக்கு மாறிய அடுத்த நாளே அந்த மருமகள் தனது மைத்துனருடன் (கணவனின் சகோதரன்) ஓட்டம் பிடித்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; குறைந்த செலவில் நிலத்தை மாற்றலாம் என்ற தரகரின் மோசமான ஆலோசனையை நம்பி ஏமாந்த விஷால் குமார், தற்போது தனது சொத்தையும் இழந்துவிட்டு நீதி கேட்டு அதிகாரிகளின் அலுவலகங்களை நோக்கி அலைந்து வரும் பரிதாப நிலை பலரையும் வியப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in