LATEST NEWS
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்..! ஆகஸ்ட்டில் காத்திருக்கும் க்ளைமாக்ஸ்.. திமுக-வுக்கு பதிலடி கொடுக்க கோப்புகளை திரட்டும் விஜய் அரசு – சூடேறும் தமிழக அரசியல்.!!
தமிழக சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்காலத்தில் ‘பார்ட்டி ஃபண்ட்’ முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் விஜய் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அதற்குரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். முதல்வர் விஜய்யின் இந்த அதிரடிப் புகாரால் பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுகவினர் இதற்கு தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த அரசியல் மோதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முந்தைய திமுக ஆட்சியின் கருவூல இழப்பு மற்றும் ஒப்பந்த முறைகேடுகள் குறித்த முக்கிய ஆவணங்களையும் கோப்புகளையும் உடனடியாகத் திரட்டுமாறு அதிகாரிகளுக்கு தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த ஆதாரங்களை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்து, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பலத்த பதிலடி கொடுக்க தவெக அரசு தற்போது தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.
