செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்!.. கரூரில் சிக்கிய ‘அந்த’ முக்கிய டைரி.. ED போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. பதறும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்!.. கரூரில் சிக்கிய ‘அந்த’ முக்கிய டைரி.. ED போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. பதறும் அரசியல் களம்..!!

Published

on

தமிழகத்தில் தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பான அரசியல் வழக்கு, முழுமையாக செந்தில் பாலாஜியை சுற்றியே சுழன்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பெருமளவில் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக செந்தில் பாலாஜியைகுறிவைத்து தீவிரமாகக் கைது செய்யும் முனைப்பில் அமலாக்கத்துறை களம் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு கரூர் எல்ஜிபி நகரில் உள்ள கனகராஜ் என்பவருக்குச் சொந்தமான அலுவலகத்தில் காவல்துறை திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டது. விடிய விடிய நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவில், அந்த அலுவலகத்தில் இருந்த முக்கியமான சிசிடிவி காட்சிகளின் பதிவுகள் மற்றும் கணக்கு புத்தகங்கள் போன்ற முக்கிய ஆவணங்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர், இது இந்த வழக்கில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in