அடப்பாவமே.. உலகக் கோப்பையை வென்றாலும் வீரர்கள் வீட்டுக்குக் கொண்டு போக முடியாதா?.. ஏன் தெரியுமா?.. 1974 முதல் ஃபிஃபா ஒளித்து வைத்திருக்கும் ‘அந்த’ ஒரு ரகசியம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடப்பாவமே.. உலகக் கோப்பையை வென்றாலும் வீரர்கள் வீட்டுக்குக் கொண்டு போக முடியாதா?.. ஏன் தெரியுமா?.. 1974 முதல் ஃபிஃபா ஒளித்து வைத்திருக்கும் ‘அந்த’ ஒரு ரகசியம்..!!

Published

on

நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள ஸ்பெயின் – அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றியாளர்களுக்குக் கோப்பையை வழங்கவுள்ளார். 1974 முதல் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த அசல் கோப்பை கடந்த காலங்களில் இரண்டு முறை திருடப்பட்டதால், ஃபிஃபா அமைப்பால் சுவிட்சர்லாந்து தலைமையகத்தில் மிகப்பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் மற்றும் நாட்டுத் தலைவர்களைத் தவிர வேறு யாரும் இதைத் தொட அனுமதியில்லை. போட்டி முடிந்ததும் மைதானத்தில் தற்காலிகக் கொண்டாட்டத்திற்கு மட்டுமே அசல் கோப்பை அனுமதிக்கப்படும் என்பதால், வெற்றி பெறும் அணி வீட்டிற்கு எடுத்துச் செல்ல இதன் மாதிரிப் பிரதியே வழங்கப்படும். மேலும், கடந்த ஆண்டு கிளப் உலகக் கோப்பையைப் போலவே இந்த முறையும் வெற்றியாளர்களுடன் இணைந்து கோப்பையை ஏந்திச் செல்ல அதிபர் டிரம்பிற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், இந்த உலகக் கோப்பைத் தொடரை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வரும் டொனால்டு டிரம்ப், அடுத்த பதிப்பை அமெரிக்கா மட்டுமே தனியாக நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். தற்போதைய தொடரைத் தனது அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து நடத்தியுள்ள நிலையில், அடுத்த முறை அவர்களைக் கழற்றிவிட அவர் திட்டமிட்டுள்ளார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவைச் சந்தித்த அதிபர் டிரம்ப், அடுத்த உலகக் கோப்பையை நடத்த நீங்கள் மீண்டும் அமெரிக்காவையே தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முறை கனடாவையும் மெக்சிகோவையும் நாம் இதில் இருந்து விலக்கி விடுவோம் என்று அவரிடம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in