CINEMA
ஆடம்பர உணவுகளுக்கு நோ…9.30 மணிக்கு ஷார்ப்பா ஒரு பழக்கம்…உடற்பயிற்சியே செஞ்சது இல்ல…”ஆடம்பர உணவுகளுக்கு நோ!” – வெண்ணிற ஆடை மூர்த்தி இத்தனை வருடங்கள் ஆரோக்கியமாக வாழ இதுதான் காரணமா?….
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் – சிவாஜி காலம் தொட்டு ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் எனப் பல தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நம்மை வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தவர் நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. கடந்த 1965 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தனக்கென்று தனிபாணியை உருவாக்கிக்கொண்ட இவர், விரைவில் தனது 90 ஆவது வயதைத் தொடவுள்ளார். இந்தத் தள்ளாடும் வயதிலும் அவர் எப்படி எவ்வித பெரிய உடல்நலப் பாதிப்புகளும் இன்றி ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைமுறை ரகசியம் ஒளிந்துள்ளது.
சிறு வயது முதலே தனக்கு விளையாட்டுகளில் ஆர்வம் இருந்ததில்லை என்றும், உடற்பயிற்சி என எதையும் தான் செய்ததே இல்லை என்றும் பேட்டி ஒன்றில் வெண்ணிற ஆடை மூர்த்தி ஓபனாகப் பகிர்ந்துள்ளார். ஆனால், அவரது இந்த நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியக் காரணம் அவர் கடைப்பிடித்து வரும் கடுமையான நேர ஒழுக்கமும், உணவு மற்றும் தூக்க ஒழுக்கமும்தான். முற்றிலும் சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் அவர், காலையில் இட்லி, மதியம் பாரம்பரிய சாம்பார், ரசம் சாதம், இரவில் சப்பாத்தி என மிகவும் எளிமையான உணவுகளையே சாப்பிடுகிறார். ஆடம்பர உணவுகள் (Fancy foods) எதையும் தொடக்கூட மாட்டார்.
அவர் உணவு விஷயத்தில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைவிட, அதை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். தினமும் இரவு 9.30 மணிக்குச் சரியாகச் சாப்பிட்டு முடிக்கும் அவர், சாப்பிட்ட உடனே தூங்கச் செல்லாமல் ஒரு மணி நேரம் வரை டிவி பார்ப்பது அல்லது பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது முதுமை காரணமாக உணவின் அளவு குறைந்திருந்தாலும், ஞாபக மறதி போன்ற இயல்பானப் பிரச்சினைகள் இருந்தாலும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி லேசான நடைப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சிறு வயது முதலே ஆடம்பரமில்லாத எளிய உணவுப் பழக்கத்தையும், முறையான நேர நிர்வாகத்தையும் அவர் பின்பற்றியதே அவரது இந்த 90 வயது ஆரோக்கியத்தின் ரகசியமாகும்.
