LATEST NEWS
பாமக – தவெக மெகா கூட்டணி?.. வன்னி அரசு சொன்ன ‘அந்த’ ஒரே ஒரு வார்த்தை.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
விசிக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் மாநில முதன்மைச் செயலாளருமான வன்னி அரசு, தவெகவுடன் பாமக இணைந்தால் விசிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, ஆதாரமற்ற கற்பனையான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தவெக மற்றும் பாமக இடையேயான கூட்டணி குறித்துப் பரவி வரும் யூகங்களுக்குத் தங்களால் விளக்கம் அளிக்க முடியாது என்றும், வெறும் ஊகங்களின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது தேவையற்றது என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தவெக – பாமக கூட்டணி அமைந்தால் விசிகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது குறித்துப் பல்வேறு ஊடகச் சந்திப்புகளில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்கனவே தெளிவான பதில்களை அளித்துள்ளார் என்பதை வன்னி அரசு சுட்டிக்காட்டினார். தலைவர் திருமாவளவன் விரிவாக விளக்கியுள்ள ஒரு விஷயத்திற்குத் தான் தனியாக மீண்டும் கோனார் உரை எழுத வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்துகளே விசிகவின் அதிகாரப்பூர்வமான இறுதி முடிவு என்றும் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
