LATEST NEWS
“60 நாள் ஆச்சு.. என்ன மாறுச்சு?”.. விஜய் ஆட்சியை வறுத்தெடுத்த கிருஷ்ணசாமி.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!
தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்று 60 நாட்களைக் கடந்தும் இன்னும் எந்தவொரு ஆக்கப்பூர்வமான மாற்றமும் நிகழவில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி காட்டமாக விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், எவ்வித அரசியல் அழுத்தங்களும் இல்லாமல் வெளிப்படையான, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசியல் போக்குகளைச் சாடிய அவர், தேர்தல் களம் என்று வரும்போது நடிகர் விஜய்யை எதிர்த்து நின்று, அதில் வெற்றி பெற்ற உடனேயே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அவருடன் சென்று இணைவது என்ன மாதிரியான அரசியல் என்றே புரியவில்லை என்று விமர்சித்தார். சுயநலப் போக்குடன் அரங்கேறி வரும் இந்த விசித்திரமான புதிய கலாச்சார அரசியலுக்கு மக்கள் விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் தனது பேட்டியில் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
