LATEST NEWS
“ஒரு பக்கம் மார்பகத்தை எடுக்க சொன்னாங்க..” “இதுதான் நோய்களுக்கு முக்கிய காரணம்.. இறப்பதற்கு முன் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டம் ஷிகார்பூர் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனில் சர்மா (63), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது மறைவு செய்தி, அவரது தொகுதி மக்களிடையேயும் பாஜக தொண்டர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://www.facebook.com/share/v/18fv8Af6Qx/
அவரது மறைவைத் தொடர்ந்து, அவர் உயிரிழப்பதற்கு முன்பாகப் புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பாகப் பேசியிருந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கடந்த 2020-ஆம் ஆண்டு தனக்கு மார்பகப் பகுதியில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், வேதிச்சிகிச்சை , கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சையின் ஒரு பகுதியாகத் தனது ஒரு பக்க மார்பகத்தையே அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தனது சிகிச்சை அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்கள் தங்களது வாழ்க்கைமுறையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அனில் சர்மா அந்த வீடியோவில் வலியுறுத்தியுள்ளார். விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானியங்கள் பயன்படுத்தப்படுவதே பல்வேறு நோய்கள் உருவாவதற்கு முக்கியக் காரணம் என்றும், தனது அனுபவம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
