“பல கட்சிகள் கூப்பிட்டாங்க, ஆனா”.. மேடையிலேயே கதறி அழுத அதிமுக EX அமைச்சர்.. கோவையில் தொண்டர்களை உலுக்கிய நெகிழ்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பல கட்சிகள் கூப்பிட்டாங்க, ஆனா”.. மேடையிலேயே கதறி அழுத அதிமுக EX அமைச்சர்.. கோவையில் தொண்டர்களை உலுக்கிய நெகிழ்ச்சி சம்பவம்..!!

Published

on

கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையிலேயே அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வேலுசாமி உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் பெரும் வருத்தத்திலும் வேதனையிலும் தவித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், மாற்று அரசியல் கட்சிகளிலிருந்து தங்களை நோக்கி ஏராளமான அழைப்புகளும் வாய்ப்புகளும் வந்ததாகத் தெரிவித்தார். ஆனால், தமக்கு அரசியல் முகவரியைக் கொடுத்து வாழ வைத்த அதிமுகவை விட்டுப் பிரிந்து செல்ல தமக்கு ஒருபோதும் மனமில்லை என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

மேலும், அதிமுகவின் இரட்டை இலைக் கரை வேஷ்டிக்கு பதிலாக, வேறொரு கட்சியின் கரை வேஷ்டியைக் கட்டுவதற்கு என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை; என் வாழ்வில் உயர்வு வந்தாலும் சரி, வீழ்ச்சி வந்தாலும் சரி, அது இந்த அதிமுகவோடு மட்டும்தான் என்று அவர் கண்ணீர்மல்கக் கூறினார். மேடையில் மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு விம்மி அழுது பேசியதைக் கண்டு, அங்கிருந்த கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வடித்ததால் அந்த இடமே சிறிது நேரம் நெகிழ்ச்சியில் மூழ்கியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in