“அடேய் அது பாம்பா… இல்ல பூமாலைடா..” நடுரோட்டில் ஆபத்தான மலைப்பாம்புடன் ஐடி ஊழியர் செய்த அதிரடி காரியம்.. நெஞ்சைப் படபடைக்க வைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடேய் அது பாம்பா… இல்ல பூமாலைடா..” நடுரோட்டில் ஆபத்தான மலைப்பாம்புடன் ஐடி ஊழியர் செய்த அதிரடி காரியம்.. நெஞ்சைப் படபடைக்க வைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

ஹைதராபாத்தில் ஐடி ஊழியர் ஒருவர் தனது கையில் பெரிய மலைப்பாம்பைச் சுருட்டி வைத்துக்கொண்டு சாலையோரம் சாதாரணமாக உலா வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் நெஞ்சைப் படபடைக்க வைத்துள்ளது. துர்கம் செருவு பகுதியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்திற்கு வெளியே காணப்பட்ட அந்த மலைப்பாம்பை அந்த ஊழியர் மீட்டுள்ளார். பல அடி நீளமுள்ள அந்தப் பாம்பை ஏதோ செல்லப் பிராணியைப் போல மிகவும் நிதானமாகவும், அச்சமின்றியும் அவர் கையில் சுற்றியபடி வைத்திருந்த விசித்திரக் காட்சி பார்ப்போரை உறைந்துபோகச் செய்துள்ளது.

பாம்பைக் கையில் சுற்றியிருந்த அந்த நபர், அங்கிருந்து நகர்வதற்கு எந்த அவசரமும் காட்டாமல் மிகவும் நிதானமாக ஸ்கூட்டரில் ஏறிச் சென்றார். பொதுவாக மலைப்பாம்புகள் விஷமற்றவை என்றாலும், அவை தங்களின் பலமான தசைகளால் இரையை இறுக்கமாகக் கட்டி மூச்சுத்திணறச் செய்தே கொல்லும் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. நாய், பூனைகளைச் சாலையில் அழைத்துச் செல்வதைப் பார்த்த மக்களுக்கு, ஒரு நபர் மலைப்பாம்புடன் சர்வ சாதாரணமாக வலம் வந்த இந்த வீடியோ இணையத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in