“அந்த ஒரே ஒரு வாக்குறுதியைத் தாருங்கள்… உண்ணாவிரதத்தை உடனே முடிக்கிறேன்..! சோனம் வாங்சுக் போட்ட அதிரடி கண்டிஷன்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த ஒரே ஒரு வாக்குறுதியைத் தாருங்கள்… உண்ணாவிரதத்தை உடனே முடிக்கிறேன்..! சோனம் வாங்சுக் போட்ட அதிரடி கண்டிஷன்..!!”

Published

on

சமூக ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், கல்வித் துறைச் சீர்திருத்தங்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசுக்கு முக்கியக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நீட் தேர்வு முறைகேடு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி ‘நாடாளுமன்றம் நோக்கி பேரணி’ (Chalo Sansad) மற்றும் அமைதியான போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்தவிதப் பழிவாங்கும் நடவடிக்கையோ, சட்டப்பூர்வ வழக்குகளோ பாயாது என மத்திய அரசு முறைப்படியான உறுதியளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நேர்மையான கல்வி முறைக்காகவே குரல் கொடுத்தனர் என்றும், இந்த ஒரே ஒரு வாக்குறுதியை அரசு எழுத்துப்பூர்வமாக அளித்தால் உடனடியாகத் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடத் தயார் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in