கையில் மதுபாட்டில்.. காதலனுடன் ரொமான்ஸ்.. அவள் குடிப்பதே எங்களுக்கு தெரியாது… கதறும் கேதனின் தாய்.. கொலைகார சகோதரியின் ரகசியங்களை கொட்டித் தீர்த்த தம்பி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கையில் மதுபாட்டில்.. காதலனுடன் ரொமான்ஸ்.. அவள் குடிப்பதே எங்களுக்கு தெரியாது… கதறும் கேதனின் தாய்.. கொலைகார சகோதரியின் ரகசியங்களை கொட்டித் தீர்த்த தம்பி..!!

Published

on

மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது காதலி சியா கோயல் தொடர்பான இரண்டு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. லோஹாகர் கோட்டையிலிருந்து கேதனை பள்ளத்தில் தள்ளி கொலை செய்ததாக சியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் சியா ஒரு பப்பில் மது பாட்டிலுடன் அமந்திருப்பதும், மற்றொரு வீடியோவில் அவர் தனது முன்னாள் காதலனும் இந்த வழக்கின் இணை குற்றவாளியுமான சேத்தன் சௌத்ரியை கட்டிப்பிடிப்பதும் பதிவாகியுள்ளது. சியாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது தங்களுக்கு முற்றிலும் மறைக்கப்பட்டு விட்டதாக கேதனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சியாவின் சகோதரர் சாஹில் கோயலிடம் குற்றப்பிரிவு போலீசார் சுமார் 10 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இந்தத் திருமணம் இரு குடும்பங்களுக்கும் இடையிலான ஒரு இரட்டைத் திருமண ஒப்பந்தமாக திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது, முதலில் நவம்பர் 2026-ல் கேதன் மற்றும் சியாவின் திருமணம் நடப்பதாகவும், அதனைத் தொடர்ந்து சாஹிலுக்கும் கேதனின் சொந்த சகோதரிக்கும் திருமணம் நடப்பதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் கேதனின் கொலைக்குப் பிறகு சாஹில் மீதும் போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது.

Advertisement

போலீஸ் விசாரணையின் போது சாஹில் தான் நிரபராதி என்று கூறியுள்ளார். சியா தனக்கு சத்தியம் செய்து கொடுத்து சேத்தனுடனான உறவை முறித்துக் கொண்டதாகக் கூறியதால், அதை நம்பி தான் பெற்றோரிடம் எதையும் கூறவில்லை என சாஹில் தெரிவித்துள்ளார். சியா திருமணத்திற்கு மிகவும் மகிழ்ச்சியுடன் தயாராகி வந்ததாக அவர் கூறினார். இருப்பினும், போலீஸ் தரப்பு சாஹிலின் இந்த வாதத்தை மறுக்கிறது. சியா மற்றும் சேத்தனின் கள்ளத்தொடர்பு பற்றி சாஹிலுக்கு ஆரம்பத்திலிருந்தே அனைத்தும் தெரியும் என்றும், அவர் திட்டமிட்டு உண்மையை மறைத்துள்ளார் என்றும் போலீசார் நம்புகின்றனர். இந்த சதியில் சாஹிலுக்கு தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய அவரது போன் அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் அரட்டைகளை போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in