LATEST NEWS
அதிமுகவிடம் தவெக ஏன் ஆதரவு கேட்கல..? தேர்தல் ரிசல்ட் அப்போ நடந்த ரகசியம்… எடப்பாடி செஞ்ச அந்த ஒரு துரோகம்.. உண்மையை புட்டு புட்டு வைத்த ஆதவ் அர்ஜுனா…!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுகவிடம் தவெக ஏன் ஆதரவு கோரவில்லை என்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் திரைக்குப் பின்னால் நடந்த அரசியல் நகர்வுகளையும், திமுக மற்றும் அதிமுக இடையே நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தைகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தேர்தல் முடிவுகளின்போதே பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் கைகோர்க்கத் தொடங்கிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவரது மகன் மிதுனும் இணைந்து கூட்டு ஆட்சி அமைப்பது குறித்துப் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார். தலா இரண்டரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமியும், உதயநிதியும் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் வகையிலான இந்த உடன்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் உடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ரகசியப் பேச்சுவார்த்தை அதிமுக தொண்டர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று அமைச்சர் சாடியுள்ளார். எம்.ஜி.ஆர் திமுகவை எதிர்த்துதான் அதிமுகவைத் தொடங்கினார் என்பதையும், சட்டமன்றத்தில் ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர், ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணக்கமாக இருந்தபோது ‘துரோகி’ என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இன்று ஒட்டுமொத்த கட்சியையுமே திமுகவிடம் அடகு வைக்கத் துணிந்துவிட்டதாகக் கொந்தளித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி தன் மகன் மிதுனை அதிமுக இளைஞரணிப் பொறுப்பில் அமர்த்துவதற்கான தீர்மானங்களை ரகசியமாகத் தயாரித்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களின் சுயநல அரசியலுக்காக வரும் உள்ளாட்சித் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலின் போது அதிகாரப்பூர்வமாகத் தங்களின் கூட்டணியை அறிவிப்பார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கணித்துள்ளார். கொள்கை ரீதியாகத் தவெக உறுதியாக இருந்ததால்தான், இத்தகைய துரோக அரசியலில் ஈடுபட்ட அதிமுகவிடம் ஆதரவு கேட்கவில்லை என்று கூறிய அவர், எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வுகளால் அதிருப்தியடைந்துள்ள ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
