நள்ளிரவு 1 மணி.. கணவன் இறந்து 4 மாசம் கூட ஆகல.. தூங்கிக்கொண்டிருந்த மருமகளை சீண்டிய மாமனார்.. கத்தியால் குத்தியே கொன்ற சம்பவம்… பல்லாவரமே நடுநடுங்கிப்போச்சி…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நள்ளிரவு 1 மணி.. கணவன் இறந்து 4 மாசம் கூட ஆகல.. தூங்கிக்கொண்டிருந்த மருமகளை சீண்டிய மாமனார்.. கத்தியால் குத்தியே கொன்ற சம்பவம்… பல்லாவரமே நடுநடுங்கிப்போச்சி…!!

Published

on

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண்ணுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரது கணவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனது மாமனார், மாமியார் மற்றும் குழந்தைகளுடன் அவர் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சமீபத்தில், அப்பெண்ணின் மாமியார் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்ட மாமனார், மருமகளுக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரிடம் ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், நள்ளிரவு சுமார் 1 மணியளவில் மருமகள் தூங்கிக் கொண்டிருந்த போது, மாமனார் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அப்பெண், சமையலறையில் காய்கறி நறுக்குவதற்காக வைத்திருந்த கத்தியால் மாமனாரைச் சரமாரியாகக் குத்திக் கொலை செய்ததாகக் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்து, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மாமனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வீட்டில் நடந்த இந்த விபரீதம் குறித்து அப்பெண் தனது நாத்தனாரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நாத்தனாரும் அவரது சகோதரிகளும் சங்கர் நகர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாமனாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை செய்த மருமகளைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in