நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதம்: மொபைலில் பேசியபடி சென்ற நபர்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி.. வழியில் காத்திருந்த எமன்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நெஞ்சைப் பதறவைக்கும் விபரீதம்: மொபைலில் பேசியபடி சென்ற நபர்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி.. வழியில் காத்திருந்த எமன்…!!

Published

on

மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இடையே, சாகிநாக்கா பகுதியில் உள்ள கைராணி சாலையில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்ற நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக 25 அடி ஆழமுள்ள திறந்திருந்த மேன்ஹோலுக்குள் (பாதாள சாக்கடை) விழுந்துள்ளார். அப்பகுதியில் தனியார் ஒப்பந்ததாரர் ஒருவரால் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததால் மேன்ஹோல் மூடி திறக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மும்பை தீயணைப்புப் படை, காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக மேன்ஹோலுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தீவிர சோதனையின் போது அந்த நபர் பயன்படுத்திய குடை மற்றும் செருப்புகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மழையின் காரணமாக சாக்கடையில் தண்ணீர் மிக வேகமாக பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த நபர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Advertisement

தற்போது மீட்புக் குழுவினர் அதிநவீன உபகரணங்களின் உதவியுடன், அந்த மேன்ஹோலைச் சுற்றியுள்ள பிற வடிகால் இணைப்புகள் மற்றும் சாக்கடைப் பாதைகளிலும் போர்க்கால அடிப்படையில் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மும்பை செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in