குதிரை பேரத்தின் நம்பர் ஒன் குற்றவாளி யார் தெரியுமா..? குண்டை தூக்கிப்போட்ட திமுக புள்ளி… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குதிரை பேரத்தின் நம்பர் ஒன் குற்றவாளி யார் தெரியுமா..? குண்டை தூக்கிப்போட்ட திமுக புள்ளி… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!!

Published

on

தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேச திமுக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக நேற்று தவெக அமைச்சர் நிர்மல்குமார் சுமத்திய குற்றச்சாட்டை திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன், தற்போதைய முதல்வர் விஜய்யின் அரசு சீட்டுக்கட்டுப் போலத் தானாகவே சரியும் நிலையில் தான் உள்ளது என்றும், அதற்கு திமுக எந்தவொரு பேரமும் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் விளக்கியுள்ளார்.

மேலும், தவெக ஆட்சியமைப்பதற்கு முன்பாகவே தனது பலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக அந்தக் கட்சி தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகப் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே பகிரங்கமாக உடைத்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், குதிரை பேரத்தின் நம்பர் ஒன் குற்றவாளியே முதல்வர் விஜய் தான் என்றும், அவர் சட்டப்படி சிக்கிவிடுவார் என்ற பயத்தினாலேயே தற்போது வைகோ தனது பேச்சை மாற்றிப் பேசி வருகிறார் என்றும் சாடியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in