CRIME
“கர்மா சும்மா விடாது..!” 10 ஆம் வகுப்பு மாணவி வழக்கில் திடீர் திருப்பம்.. அழுகிய காலோடு மருத்துவமனையில் அலறும் குற்றவாளி.. அதிர்ச்சி பின்னணி..!!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு அரசுப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவி கோபிகாவை எலக்ட்ரிக் ரம்பத்தால் கொடூரமான முறையில் தாக்கிய வழக்கின் முக்கியக் குற்றவாளியான எம். ஹேமந்த் என்பவரின் வலது கால், போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் மற்றும் போதிய ரத்த ஓட்டமின்மை காரணமாக மருத்துவர்களால் அகற்றப்பட்டுள்ளது. இந்த பயங்கரத் தாக்குதலுக்குப் பிறகு அட்மாகூர் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த ஹேமந்தை பிடிப்பதற்காகப் போலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, காவல்துறையினரைக் கண்டதும் சரணடைய மறுத்து, அவர்களைக் கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றதால், தற்காப்பிற்காகப் போலிஸார் ஆறு ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; இதில் ஹேமந்தின் இரு கால்களிலும் பலத்த குண்டுக்காயங்கள் ஏற்பட்டன.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த ஹேமந்த் உடனடியாக மீட்கப்பட்டு, அனந்தபூர் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட தீவிரப் பரிசோதனையில், குண்டு பாய்ந்த அவரது வலது காலில் போதிய ரத்த ஓட்டம் இல்லாததால் திசுக்கள் அழுகும் ‘கேங்க்ரின்’ பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் நச்சுக்கள் உடல் முழுவதும் பரவாமல் தடுக்கவும், அவசர உயிர் காக்கும் நடவடிக்கையாகவும் ஹேமந்தின் வலது காலை முட்டிக்குக் கீழ் அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்து அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். பள்ளி வகுப்பறைக்குள்ளேயே புகுந்து மாணவியைக் கொல்ல முயன்ற உன்னமனின் கால் அகற்றப்பட்ட இந்தச் சம்பவம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தற்போதைய முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
