LATEST NEWS
லஞ்ச ஒழிப்புத் துறை ரெடி… நீங்க ரெடியா..? ஊழல் திமிங்கிலங்களை வேட்டையாடப் போகும் ‘அந்த’ ஒரு மின்னஞ்சல்…! ஆக்ஷன் மோடில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!!
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போதைய அரசு மிகவும் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடந்த ஆட்சிக் காலங்களில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் திட்டமிடப்பட்ட விதிமீறல்கள், மையப்படுத்தப்பட்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் பெருமளவில் நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள், ஒப்பந்தங்கள் வாங்கித் தருவதாகக் கூறிப் பல ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சமாகப் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு, முறையாக வேலைகளை ஒதுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து தற்போது பல புகார்கள் தங்களுக்கு வந்துகொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, கடந்த ஆட்சியில் முறைகேடுகளால் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் அல்லது பொதுமக்கள் இது குறித்துத் தன்னிடம் நேரடியாகவோ, லஞ்ச ஒழிப்புத் துறையிடமோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்துள்ளார். மேலும், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்புடன் இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனிவரும் காலங்களில் ஒப்பந்தங்கள் அனைத்தும் நேர்மையாக மட்டுமே நடைபெறும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
