LATEST NEWS
காலை 8.15 மணிக்கு டாய்லெட்டிற்கு போன மனுஷன்… 10.15 மணிக்குத்தான் அங்கிருந்து வெளியே வந்திருக்காரு… “டாய்லெட் புரட்சியாளர்” உதயநிதியை வச்சு செஞ்ச ஆதவ் அர்ஜுனா..!!
பெண்களை அசிங்கமாகப் பேசியவரை டாய்லெட்டில் 2 மணிநேரம் உட்கார வைத்தது தவெக அரசுதான் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக நிகழ்ச்சியில் ஆவேசமாகப் பேசிய அவர், காலை 8.15 மணிக்கு டாய்லெட்டிற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், காலை 10.15 மணிக்குத்தான் அங்கிருந்து வெளியே வந்தார் என்று குறிப்பிட்டதோடு, அவரை ஒரு “டாய்லெட் புரட்சியாளர்” என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், தவெக அரசு ஆட்சியில் இருக்கும் வரை பெண்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில், பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான பேச்சுக்களைத் தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்பதைத் தெளிவுபடுத்திய அவர், இந்தச் சம்பவத்தின் மூலம் தங்களது அரசு சட்டம் ஒழுங்கிலும், பெண்களின் பாதுகாப்பிலும் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
